fbpx
Homeபிற செய்திகள்சோத்துப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

சோத்துப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

சோத்துப்பாறை அணையில் இருந்து தண்ணீரை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா திறந்து வைத்தார். தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் தேனி மாவட்டத்தில் நீர்நிலைகள் நிறைந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சோத்துப்பாறை அணையின் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். வி. ஷஜீவனா தண்ணீர் திறந்து வைத்தார்.
தற்போது சோத்துப்பாறை அணையின் மொத்த கொள்ளளவு 126.28 அடி. தற்போது 126.41 கன அடி தண்ணீர் உள்ளது.

இதனால் தமிழக அரசுக்கு இப்பகுதி விவசாயிகள் தண்ணீர் திறக்க அரசுக்கு கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு இன்று சோத்துப்பாறை அணையில் இருந்து 318.56 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பித்தது. 136 நாட்களுக்கு 318.56 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்படும்.

2,932 ஏக்கர்கள் பயன் பெரும் வகையில் திறக்கப்பட்ட தண்ணீருக்கு மலர் தூவி மாவட்ட ஆட்சியரும் விவசாயிகளும் அதிகாரிகளும் வரவேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img