சி.பசுபதி பாண்டியனின் 12 வது நினைவு தினத்தை முன்னிட்டு தேனியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
தேனி அல்லிநகரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற ரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.
ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட ரத்தம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் சந்தான பிரியா வழிகாட்டுதலின்படி மாநிலச் செயலாளர் பி.பி.நட ராஜன் துவக்கி வைத்தார்.
இந்த முகாமில் சதீஷ்குமார் தேனி நகர செயலாளர், நகர இணை செயலாளர் சிவா, நகர பொருளாளர் முருகேசன், நகர இளைஞரணி செயலாளர் சேது, தேனி வடக்கு மாவட்ட செயலாளர் லட்சுமி மணி, தேனி வடக்கு மாவட்ட இணை செயலாளர் அலெக்ஸ் பாண்டியன், தென் மண்டல செயலாளர் கருப்பையா பாண்டியன், தேனி மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மருத்துவ அதிகாரி பிரியா, வார்டு கவுன்சிலர் செல்வி, காங்கிரஸ் எஸ்சி – எஸ்.டி பிரிவு மாவட்ட தலைவர் இனியவன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.