தாய்லாந்து மெத்தராத் பல்கலைக்கழகத்துடன், கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது.
இவ்வொப்பந்தத்தில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சார்பில், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயண சுவாமி, தாய்லாந்து மெத்தராத் பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் சௌ ஃபெய் ஆகியோர் கையொப்பமிட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டனர்.
இவ்வொப்பத்தின் மூலம், “ஆசிரியர்கள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், குறுகிய கால கற்றல் பயிற்சிகள், இரு கல்வி நிறுவன ஆசிரியர்களின் மேற்பார்வையின் கீழ் ஆராய்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றை இரு கல்வி நிறுவனங்களின் கல்விக்கான ஆதாரமாகப் பயன்ப டுத்திக் கொள்ளப்பட உள்ளது.
மாணவர் பரிமாற்றத் திட்டத்தில் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் இரு கல்வி நிறுவனங் களிலும் படிப்பார்கள்.
கல்வி மேம்பாட்டிற்காக இரு கல்வி நிறுவனங்களும் இணைந்து கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடத்தி உயர்கல்வியில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் பற்றி ஆராயப்பட உள்ளன.
ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட் டங்கள் மூலமாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஆய்வு முடிவுகள், ஒருங்கிணைந்த கற்றல், ஆராய்ச்சி நிதி பெறுதல் போன்றவை பகிர்ந்துக் கொள்ளப்பட உள்ளன. அறிவுப் பகிர்வு திட்டங்கள் இணையவழியில் மேற்கொள்ளப்பட்டு கல்வி இதழ்கள், வெளியீடுகள், கற்றல் தரவுகளும் பகிர்ந்துக் கொள்ளப்பட உள்ளன.
இதன் ஒரு பகுதியாக, தாய்லாந்து நாட்டில் உள்ள மெத்தராத் பல் கலைக்கழகத்தில் புரிந்துணர்வு ஒப் பந்தம் பரிமாற்ற நிகழ்ச்சி இன்று (26.01.2024) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், தாய்லாந்து மெத்தராத் பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் சௌ ஃபெய் ஆகியோர் புரிந்து ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.
அப்போது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் ஜி.மரிய பிரசில்லா மற்றும் மெத்தராத் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் உடனிருந்தனர்.