fbpx
Homeபிற செய்திகள்தென்காசியில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி- மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு

தென்காசியில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி- மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் 2023-2024ம் கல்வி ஆண்டில் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை இ.சி.ஈ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

தென்காசி மாவட்டத்தில் 2023-2024ம் கல்வி ஆண்டில் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை (26.04.2024) காலை 11.00 மணிக்கு இ.சி.ஈ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்த கல்வி ஆண்டில் 11 மற்றும் 12ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள கல்லூரி படிப்புகளை பயின்று பயன் பெறுவதற்காக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலச்செயலகம் மற்றும் இயக்குநரகத்தின் உத்தரவுக்கிணங்க Movement for Transformation (MMT) and NUTURE Bhel Mass அமைப்பின் கல்வியாளர்களின் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.

மேலும் தேர்வு எழுதி தேர்ச்சி பட்டியல் வெளியீட்டிற்காக காத்திருக்கின்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் அனைவரும் கலந்து கொண்டு இதன் மூலம் பயன் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img