தமிழ்நாட்டின் தேநீர் சந்தையில் தனக்கென ஒரு இடம் பிடித்திருக்கும், புகழ்பெற்ற நிறுவனமான டாடா டீ சக்ரா கோல்ட், தனது புதிய ப்ரீமியம் தேநீரான ‘டாடா டீ சக்ரா கோல்ட் ப்ரீமியம் லீஃப்டீ’ -யை அறி முகப்படுத்தி இருக்கிறது. இந்த ப்ரீமியம் தேயிலை மிக கவனமுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட அஸ்ஸாம் தேயி லைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
நீண்ட இலைகளுடன் தேயிலை கலந்து இருப்பதால், வழக்கமான தேயிலைகளிலிருந்து மாறுப் பட்டு தனித்துவமிக்க சுவையையும், குணத்தையும் கொண்டிருக்கிறது. டாடா நுகர்வோர் தயாரிப்புகள் நிறுவனத்தின் பேக்கேஜ் செய்யப்பட்ட பானங்களின் இந்தியா – தெற்காசியா தலைவர்.
புனீத் தாஸ், தலைவர் இந்த அறிமுகம் குறித்து கூறுகையில், “ தமிழ்நாட்டில் நாங்கள் அறிமுகம் செய்திருக்கும் புதிய வகை டாடா டீ சக்ரா கோல்ட் லீஃப்டீ, , எங்கள் பிராண்டின் மிக நீண்ட பாரம்பரியத்தை ப்ரீமியம் லீஃப் டீ பிரிவில் மேலும் விரிவுபடுத்துகிறது.
பெரிய துகள் அளவி லான இலைகளின் கலவையான ப்ரீமியம் லீஃப் டீ பிரிவில், குறிப்பாக தெற்கில் பரவலாக இருக்கும் சந் தைகளில், அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கான மிகச் சரி யான தேர்வாகவும், வளர்ச்சிக்கான வாய்ப்பாகவும் இருக்கிறது’’ என்றார்.
டாடா டீ சக்ரா கோல்ட் பிராண்ட் தூதராக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.