fbpx
Homeபிற செய்திகள்ஏப்ரல் 19ம் தேதிக்கு பிறகு தேர்தல் நடத்தை விதிமுறையை தளர்த்த வேண்டும்

ஏப்ரல் 19ம் தேதிக்கு பிறகு தேர்தல் நடத்தை விதிமுறையை தளர்த்த வேண்டும்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஏப்ரல் 19ம் தேதிக்கு பிறகு தேர்தல் நடத்தை விதிமுறையை தளர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது :

தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி கடைகளுக்கு விடுமுறை அளித்து ஜனநாயக உரிமையான வாக்களிப்பது எங்களின் கடமை. சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகர்கள் குடும்பத்தோடு இணைந்த வணிக நிறுவனங்கள் வாக்களித்த பின்னர் அன்றைய தினம், கடையை திறந்து நடத்துவதற்கு அனுமதி அளித்திட வேண்டும்.

மேலும் தேர்தல் முடிவடைந்த பிறகும், ஜூன் 4ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜூன் 4ம் தேதி வரை தேர் தல் நடத்தை விதிமுறைகள் அமலாக்கத்தில் இருக்குமானால் வணி கர்களும், வணிகமும் மிகப்பெரும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். தொடர்ந்து 2 மாத கால நெருக் கடியை வணிகர்களுக்கும், பொது மக்கள், விவசாயிகளுக்கும் அளிப்பது இயற்கை நீதிக்கு
முரணானதாகும்.

தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடன் நடத்தை விதிமுறைகளை கட்டாயம் தளர்த்தி மாநில எல் லையில் மட்டுமே அமலாக்கம் செய்வதுதான் நியாயமானதாக இருக்கும் என்பதையும் தலைமை தேர்தல் அதிகாரி கவனத்தில் கொண்டு, வணிகர்கள், பொது மக்கள், விவசாயிகளுக்கு சாதகமான தீர்வுக்கு வழிவகை செய்திடுமாறு பேரமைப்பு வலியுறுத்துகின்றது.

அகில இந்திய தேர்தல் ஆணையரிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோரிக்கையையும், அதில் உள்ள நியாயத்தையும் எடுத்துக்கூறி, இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டுமென தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டி கேட்டுக் கொள்கின்றது. இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img