fbpx
Homeபிற செய்திகள்திராவிடத்தால் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன்...

திராவிடத்தால் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் அறிக்கை

திராவிடத்தால் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது என தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்தியாவில் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதற்கு முதன்மையான காரணம் திராவிடத்தை ஏற்றுக் கொண்ட தமிழக மக்கள் தான். தேசியக் கட்சிகளின் பிடியில் உள்ள மாநிலங்கள் இன்றளவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளன.

மாநில சுயாட்சியை ஏற்றுக்கொண்டு மாநில கட்சிகளுக்கு முன்னுரிமை வழங்கிய மாநிலங்கள் அதிகமான வளர்ச்சியை பெற்றுள்ளது. தந்தை பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா,கலைஞர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி ஆகியோர் திராவிட கொள்கையில் இருந்து இம்மியளவும் பிசகாமல் ஆட்சியை வழி நடத்துவதால் தமிழக மக்களிடத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தனி இடம் உள்ளது.
காமராஜரின் திட்டங்களுக்கு அவர்கள் கட்சியிலே எதிர்ப்பு வந்தபோது தந்தை பெரியார் அவருக்கு உறுதுணையாக இருந்தார். எதிர் வரிசையில் இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்கும் நல்ல திட்டங்களை வரவேற்றவர் தந்தை பெரியார். பெரியாரின் கனவு திட்டமான பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை சட்டமாக்கியதுடன், ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட சமத்துவ சமுதாயம் உருவாக்க சமத்துவபுரம் உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கலைஞர்.
அவர் வழியில் தமிழக முதல்வர் திராவிட மாடல் ஆட்சி என்ற தத்துவத்தை உருவாக்கி கல்வி, மருத்துவம், சமூக நீதி சமத்துவம்,மகளிர் மேம்பாடு, அந்நிய முதலீடுகளை ஈர்த்து தொழில்துறை வளர்ச்சி அதனால் வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற திட்டங்களால் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

இந்தியா ஒற்றை இலக்க பொருளாதாரத்தைக் கூட தாண்டாத நிலையில், தமிழக முதல்வரின் சிறப்பு திட்டங்களால் தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. கிரிக்கெட் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இளைஞர்கள் தமிழக துணை முதல்வராகவும், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராகவும் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் தமிழக இளைஞர்கள் செஸ் போட்டி, கபடி, சிலம்பம், கார் ரேஸ், ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

அவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டம் தோறும் விளையாட்டு மைதானம் அமைத்துள்ளார். அதன் பயனால் தமிழக வீரர்கள் இந்திய அளவில் மட்டும் இன்றி உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு தமிழர்கள் வெற்றிவாகை சூடி வருகிறார்கள். கழக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி தூத்துக்குடி பெரும் துயரத்தில் சிக்கிய போது மக்களோடு மக்களாக இருந்தார்.
தமிழக முதல்வர் சொல்லும் கட்டளைகளை ஏற்று தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்க முதல்வர் ஆலோசனைப்படி மக்களுடன் மக்களாக களத்தில் நின்று கனிமொழி எம்பி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர்.

திராவிட மாடல் ஆட்சியால் தமிழகம் இன்னும் உயர்ந்த நிலையை அடையும். தமிழக முதல்வரின் திட்டங்களை இந்திய மாநிலங்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் பின்பற்ற தொடங்கியுள்ளது. குறிப்பாக முதல்வரின் காலை உணவு திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வெளிநாடுகளும் இந்த திட்டத்தை பின்பற்ற தொடங்கியுள்ளது. மேலும் திராவிட மாடல் அரசின் தனிச்சிறப்பு என்ன வென்றால் இந்திய விடுதலைக்காகவும், தமிழுக்காகவும் போராடிய வரலாற்று வீரர்கள் மற்றும் தலைவர்கள், ம.பொ.சி.,ஜி.டி.நாயுடு, ராமாமிர்தம்மாள் போன்ற மக்கள் தலைவர்களை கட்சிப் பாகுபாடு இன்றி போற்றுவது திராவிட மாடல் அரசின் தனிப்பெரும் மாண்பாக உள்ளது.
தமிழக முதல்வர் வழியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுகவில் நலிந்த திமுகவினர் மற்றும் பொதுமக்களுக்கு கல்வி உதவித் தொகை, விளையாட்டை ஊக்குவிக்க பரிசு தொகை மற்றும் பரிசு கோப்பைகள், அரசு பள்ளிகளுக்கு பெஞ்ச், டெஸ்க் போன்ற கல்வி உபகரணங்கள் வாங்க நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் தென்காசி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் மாணவர்களின் எதிர்கால கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்ட நூலகங்களுக்கு நூல்களை வாங்கி கொடுத்து அவர்களால் இயன்ற பங்களிப்பை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img