ஈரோடு ஈங்கூர் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.
இதில், மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், “இன்று பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு சிறையில் இருக்கும் போது 13 புத்தகங்களை அவர் வாசித்தார். அவர் இளைஞர்களின் எழுச்சி நாயகனாகவும் தேசப்பற்றோடும் திகழ்ந்த அவரின் வழியில் மாணவர்கள் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் செயல்பட வேண்டும்“ என்றார்.
இதில், மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார், கல்லூரி செயலாளர் சரஸ்வதி, நிர்வாக செயலாளர் டாக்டர் கே.பிரியா, முதன்மை கல்வி அதிகாரி டாக்டர் கே கருணாகரன், முதல்வர் என் ராமன் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.