நடப்பாண்டுக்கான ஜே.இ.இ மெயின் தேர்வில் கரூர் பரணி வித்யாலயா மாணவர் ஹரிஸ்குமார் 99.9 சதவீதம் பெற்று தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார். ஹரிஸ்குமார் மற்றும் சிறப்பிடம் பெற்ற பிற மாணவர்களுக்கு பரணி வித்யாலயா பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
ஜே.இ.இ. 2024 மெயின் தேர்வின் முதல் தாளில் ஹரிஸ்குமார் (99.9%), அக்சயா (98.3%), ராகுல் (98.01%) தேசிய சிறப்பிடம் பெற்றனர். மேலும் ஜே.இ.இ. மெயின் தேர்வின் முதல் தாளில் சிறப்பிடம் பெற்ற குமரன் எழில்ராம் (95.3%), வித்யவர்ஷினி (93.4%), சர்வேஷ் (92.7%), தீபக் (91.9%), ரிதன்யா (91.9%), சுனேஷ் கிருஷ்ணா (91.8%) மற்றும் ஜே.இ.இ. மெயின் தேர்வின் இரண்டாம் தாளில் சிறப்பிடம் பெற்ற துருதிஷ் கிருஷ்ணா (94.7%) ஆகியோரை வாழ்த்தி, பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
பரணி வித்யாலயா பள்ளியில் நீட், ஜே.இ.இ குரோத் அகாடமி பயிற்சி மையத்துடன் இணைந்து அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவிற்கு பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் மோகனரெங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலர் சுபாஷினி, முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பரணி வித்யாலயா பள்ளி முதல்வர் சுதாதேவி, குரோத் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் வி.எஸ்.பி.கவிதா, துணை முதல்வர் பிரியா, ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.