fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் பக்கவாத விழிப்புணர்வு கலந்துரையாடல்

ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் பக்கவாத விழிப்புணர்வு கலந்துரையாடல்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பக்க வாதம் பற்றிய விழிப்புணர்வு குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது .
வருடந்தோறும் உலக பக்கவாத தினம் அக்டோபர் இருபத்திஒன்பதாம் நாள் அனுஷ்டிக்கப்படும்.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பக்கவாதம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் தடுப்பு பரிசோதனை திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல் பொதுமக்களுடன் நடைபெற்றது .


எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைமை நிர்வாக அதிகாரி சி.வி. ராம்குமார் , மருத்துவ இயக்குநர், டாக்டர் எஸ் ராஜகோபால் , மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.அழகப்பன், தலைமை நரம்பியல் நிபுணர் கே.அசோகன், நரம்பியல் அறுவை சிகிச்சை துறை தலைவர் ஆர்.முரளி , நரம்பியல் துறை சார்ந்த மருத்துவர்கள் முத்துராஜ், வேதநாயகம்ஆகியோர் பக்கவாதம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறினர்.


பக்கவாதம் வரும் முன்பே அறிந்துகொண்டு அதை வராமல் தடுப்பதற்கான தடுப்பு பரிசோதனைகளை அறிமுகம் செய்தனர்.
பக்கவாதம் தடுப்பு பரிசோதனைகள் சிறப்பு சலுகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

படிக்க வேண்டும்

spot_img