fbpx
Homeபிற செய்திகள்மாநில சிலம்பம் போட்டியில் வெள்ளோடு அணி சாதனை

மாநில சிலம்பம் போட்டியில் வெள்ளோடு அணி சாதனை

கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழன் மிக்ஸ் மார்சியல் ஆர்ட்ஸ் மாநில அளவிலான 2024-ம் ஆண்டுக்கான சிலம்பம், காரத்தே குங்பு, யோகா போட்டிகளை திருப்பூர் ஓலிம்பியா டேக்வாண்டோ ஸ்போர்ட்ஸ் அகடாமி, திருப்பூர் தெற்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணியுடன் இணைந்து படியூரில் நடத்தியது. 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளோடு சிலம்பம் அணி மாணவர்கள் முதலிடங்களில் 3 பேர் முறையே ஸ்ரீஸ், கந்தசாமி, திவ்யாபாரதி, 2-ம் இடங்களில் சுகன்விகாஸ், திருமுகிலன், பிரணீசன் மற்றும் மோசிகா ஆகியோர் தங்கம், வெள்ளி பதக்கங்கள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்றனர்.

மாணவர்களையும், தாய்மண் சிலம்பம் மாஸ்டர் மணிமாறன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமாரை, மூத்த சிலம்பம் ஆசான் சரவணமுத்து, ஓலிம்பியா டேக்வாண்டோ ஸ்போர்ட்ஸ் அகடாமி மணிகண்டபிரபு பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img