கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா மண்டபத்தில் கோ கிளாம் என்ற பெயரில் அனைத்து மாநில கைவினைப் பொருட்கள் கண்காட்சி தொடங்கியது.
வருகிற 17ம் தேதி முடிய மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், பரிசு பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன.
முன்னதாக, கோ க்ளாம் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஹீனா மற்றும் ராகுல் தலைமையில் நடைபெற்ற கண்காட்சி துவக்க விழாவில், சிறப்பு விருந்தினர்களாக அனுஷா, மஞ்சு கிரியா, ஜனனி வெங்கட், அகல்யா ஆனந்த், இன்னர் வீல் சுமித்ரா, திவ்யா, சுமி, மினி ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர்.