செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன கல்லூரியில் தேசிய இயற்பியலாளர்கள் மாநாடு 2024 நேற்று துவங்கியது. தொடர்ந்து நான்கு நாட்கள் இந்த மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாடானது இயற்பியலில் இந்தியாவின் பிரகாசமான சிந்தனையாளர்களை ஒன்றிணைக்கும் மற்றும் ஒரு கல்வி நிகழ்வாக மட்டும் இல்லாமல், அறிவியல் ஆய்வு மற்றும் சமூக தாக்கத்தை இணைக்கும் தளமாகவும் இருக்கும்.
இந்த மாநாட்டினை எஸ்.ஆர்.எம் ஐஎஸ்டியின் துணை வேந்தர் பேராசிரியர் முத்தமிழ்செல்வன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
இதில் இந்திய அறிவியல் அகாடமியின் தலைவர் பேராசிரியர் உமேஷ் வாக்மரே, பத்மஸ்ரீ பேராசிரியர் ரோகினி காட்போல், பேராசிரியர் ஜி.பாஸ்கரன், பேராசிரியர் அரிந்தம் கோஷ், மற்றும் பேராசிரியர் உமேஷ் வாக்மரே போன்ற புகழ்பெற்ற பேச்சாளர்களின் வரிசையை இந்த மாநாடு கொண்டுள்ளது.