செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் தெலங்கானாவின் கோண்டாப்பூரில் உள்ள பார்கின்சன்ஸ் ரிசர்ச் அலையன்ஸ் ஆஃப் இந்தியா (PRAI) இணைந்து பணியாற்றுவதற்கும் குறிப்பாக நரம்பு இயக்கக் கோளாறுகள் கூட்டு ஆராய்ச்சிக்கு வழி வகுக்கும் வகையில் சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2வது சர்வதேச நரம்பியல் கருத்தரங்கின் போது எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் இணை வேந்தர் (அகடமிக்) டாக்டர் பா.சத்தியநாராயணன் முன்னிலையில் கையெழுத்தானது.
இது கூட்டு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி, மாணவர் பயிற்சி, ஆசிரியர் பரிமாற்றம், கருவிகள், தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகள் மற்றும் தொடர்ச்சியான மருத்துவக் கல்வித் திட்டங்களைப் பகிர்ந்து கொள்ள உதவும்.