fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ தர்மசாஸ்தா பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பங்கேற்ற தீப ஒளியேற்று விழா

ஸ்ரீ தர்மசாஸ்தா பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பங்கேற்ற தீப ஒளியேற்று விழா

கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பங்கேற்ற தீப ஒளி யேற்று விழா நடந்தது.

கோவை ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கத்தால் விளாங்குறிச்சி பகுதியில் ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாணவ, மாணவிகள் சிறப்பாக செயல்பட வேண்டி பள்ளி வளாகத்தில் தீப ஒளியேற்றும் விழா நடந்தது.

இவ்விழாவில், பள்ளி தலைவர் எம்.கே. வேலாயுதன் தலைமை வகித்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முன்னதாக பள்ளி முதல்வர் டி.தனலட்சுமி வரவேற்றார்.

பள்ளியின் செயலாளர் சந்தோஷ் நாயர், துணை செயலாளர் எஸ்.என். பால சுப்பி ரமணியம், துணை முதல்வர் ஆர். லதா மற்றும் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டு பொதுத்தேர்வு எழுதுவது குறித்து அறிவுரைகளை வழங்கி மாணவ, மாணவிகளை வாழ்த்தினர்.

படிக்க வேண்டும்

spot_img