fbpx
Homeபிற செய்திகள்பார்கின்சன்ஸ் நோயாளிகளுக்கான சிறப்பு முகாம்

பார்கின்சன்ஸ் நோயாளிகளுக்கான சிறப்பு முகாம்

ரேலா மருத்துவமனை பார்கின்சன்ஸ் நோயாளிகளின் பிரச்சனைகளை சரி செய்ய ஒரு மேம்பட்ட கிளினிக்-ஐ தொடங்கியிருக்கிறது. 

இந்த கிளினிக், தேவைப்படுபவர்களுக்கு மதிப்பாய்வு செய்து DBS, பொடூலினம் டாக்ஸின் மற்றும் அபோமார்ஃபைன் தெரபிக்குப் பிறகு உகந்த பலனளிக்கும் இமேஜ் வழிகாட்டல் புரோகிராமிங் போன்ற மேம்பட்ட பராமரிப்பை வழங்கும்.

இதன் தொடக்க விழா நிகழ்வில் ரேலா மருத்துவமனையின் தலைவர் முகமது ரேலா தலைமை வகித்தார். கவுரவ விருந்தினராக சத்யானந்த யோகா சென்டரின் நிறுவனர் சன்னியாசி சிவா ரிஷி கலந்து கொண்டார். தாம்பரம் காவல்துறை துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி மற்றும் நகைச்சுவை நடிகரான புகழ் ஆகியோர் தலைமை விருந்தினர்களாக பங்கேற்றனர்.

தொடர்ந்து, ஒரு யோகா அமர்வும் நடைபெற்றது. இதில் சுமார் 100 பேர் பங்கேற்றனர். 

இந்நிலையில் உலக பார்கின்சன்ஸ் தினத்தையொட்டி பார்கின்சன்ஸ், இயக்கக் கோளாறுகள் கொண்ட நோயாளிகளுக்கு இலவச கலந்தாலோசனை திட்டத்தை இந்த மாதம் 30-ம் தேதி வரை வழங்குவதையும் ரேலா மருத்துவமனை அறிவித்திருக்கிறது. 

படிக்க வேண்டும்

spot_img