ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது. மக்களிடையே உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், உலக சுகாதார அமைப்பு இந்த நாளை கடைபிடித்து வருகிறது.
இந்த ஆண்டின்“Together for Health. Stand with Science” என்ற கருப்பொருளின் கீழ், மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் பூமியின் ஆரோக்கியத்தை பாதுகாக்க அறிவியல் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வருடம் முழு வதும் நடைபெறும் விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, கோவை சாய்பாபா காலனியில் செயல்பட்டு வரும் ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மற்றும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் மையம் சார்பில், மக்களிடையே முன்னெச்சரிக்கை சுகாதார பரிசோதனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் ஆதித்யன் குகன் வழிகாட்டுதலில், 25 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு பயன்படும் வகையில், ரூ.10,000 மதிப்புள்ள கார்டியோ & டயபிட்டிஸ் மாஸ்டர் ஹெல்த் செக்கப் தொகுப்பு, இந்த வாரம் முழுவதும் வெறும் ரூ.1,000க்கு வழங்கப்படுகிறது.
அறிவியல் தரவுகளின்படி, சமீப காலங்களில் ஏற்படும் திடீர் இதய மரணங்கள், பெரும்பாலும் நீரிழிவு நோய் மற்றும் அதனுடன் இணைந்த இதய நோய்களுடன் தொடர்புடையதாக உள்ளன. குறிப்பாக 25 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் இது அதிகமாக காணப்படுவதால், இந்த வயது குழுவினருக்கு அதிக பயன் அளிக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு சுகாதார தொகுப்பில் முழுமையான இரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனைகள், இமேஜிங் பரிசோதனைகள், மேலும் எக்கோ உள்ளிட்ட மேம்பட்ட இதய பரிசோதனைகள் அடங்கும்.
ஏஜிஎஸ் ஹெல்த்கேர் நிறுவனம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக உலக சுகாதார தினத்தை அனுசரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் கருப்பொருளுடன் இணைந்து, கொங்கு மண்டல மக்களுக்கு முன்னெச்சரிக்கை சுகாதார சேவைகளை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கம் என்று டாக்டர் ஆதித்யன் குகன் தெரிவித்தார்.
இந்த முகாம் நேற்று (ஏப்ரல் 7) தொடங்கியது. வரும 11ஆம் தேதி வரை, கோவை சாய்பாபா காலனியில் உள்ள ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மையத்தில் நடைபெறும். ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில், தினமும் 50 பேருக்கு மட்டும் இந்த சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்ய: 9944333006 / 8489655556 / 9659455556.ஏஜிஎஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் இயக்குநர்கள், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும், உலக சுகாதார தின நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.



