fbpx
Homeபிற செய்திகள்ஸ்கோடாவில் கைபேசியுடன் இணைக்கப்பட்ட செயலி மூலம் கண்காணிப்பு அறிமுகம்

ஸ்கோடாவில் கைபேசியுடன் இணைக்கப்பட்ட செயலி மூலம் கண்காணிப்பு அறிமுகம்

ஸ்கோடா ஆட்டோ இந்தியா ஏற்கனவே தனது புதிய காம்பேக்ட் எஸ்யூவி அறிவிப்பு மூலம் புதிய சகாப்தத்தில் தடம் பதித்துள்ளது. மேலும் இது புதிய சகாப்தத்தில் மேலும் முன்னேறி, ஸ்கோடா நிறுவனம் 360 டிகிரி டிஜிட்டல் செயல்பாடுகளை அறி முகப்படுத்தியது.

இது குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குனர் பீட்டர் ஜனேபா கூறுகையில்,
“சமீபத்தில் முதன் முதலாக அறிமுகமான, முழுவதும் டிஜிடல் மயமாக்கப்பட்ட, 24 மணி நேர விற்பனையில் 709 ஸ்கோடா மகிழுந்துகள் ஒரே நாளில் முன்பதிவாயின.

எங்களது ஸ்கோடாவெர்ஸ் இந்தியா என்எஃப்டி-ஐ, ஸ்கோடா கியர்ஹெட்ஸ் அறிமுகம் மூலம் மேலும் விரிவுபடுத்தி உள்ளோம்.‘‘ என்றார். ஸ்கோடா ஆட்டோ இந்தியா டிஜிட்டல் மயமாக்கம் வாடிக்கையாளர்கள் மகிழுந்தைத் தேர்ந்தெடுக்கவும், வாங்கும் அனுபவத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

இந்த ஸ்கோடா கைபேசியுடன் இணைக்கப்பட்ட செயலி மூலம், வாடிக்கையாளர் பழுது நீக்கும் பணிக்கு விடப்பட்ட தங்களது மகிழுந்தை, எங்கிருந்து வேண்டுமானாலும் கண்காணித்து, தேவையான சேவையை ஏற்கலாம் அல்லது மறுக்கலாம்.

படிக்க வேண்டும்

spot_img