கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறைகளில் டேட்டா அனலிட்டிக்ஸ் மற்றும் சைபர் செக்யூரிட்டி துறைகள் சார்பில் சைபர் நெக்சஸ் 2024 எனும் தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான திறன் மேம்பாட்டு போட்டிகள் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு, இக்கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். கணினி அறிவியல் (டேட்டா அனலிட்டிக்ஸ் மற்றும் சைபர் செக்யூரிட்டி) துறைகளின் தலைவர் வி.விஜயகுமார் திறன் மேம்பாட்டு போட்டிகளின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.
கோயம்புத்தூர் எக்ஸாவேர் டெக்னாலஜிஸ் குழுத் தலைவர் ஆன்ட்ரூ விஜய் லாரன்ஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். உரையாற்றினார்.
தொடர்ந்து புதிய தொழில்நுட்பம் சார்ந்த இதழ்கள் வெளியிடப்பட்டது. பின்னர், பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த மாணவ மாணவிகளுக்கு இடையே திறன்சார் போட்டிகள் நடைபெற்றன.