fbpx
Homeபிற செய்திகள்சிறுமுகையில் நீர்மோர் பந்தல் திறப்பு

சிறுமுகையில் நீர்மோர் பந்தல் திறப்பு

திராவிட முன்னேற்ற கழகம் சிறுமுகை பேரூர் கழகம் காரமடை கிழக்கு ஒன்றியம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி. கல்யாணசுந்தரம் தலைமையில் சிறுமுகை தியோட்டர் மேடு அருகே நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சிறுமுகை நகர கழக செயலாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார். மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் பா.அருண்குமார், மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினர் கவிதா கல்யாணசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர் மோர், தர்பூசணி ஆகியவற்றை வழங்கினர்.

இதில் மாநில பொதுக் குழு உறுப்பினர் நவீன், சிறுமுகை பேரூராட்சி துணை தலைவர் செந்தில் குமார், ஆலயம் பாலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img