கோவை இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் அப்&டவுன் சார்பில் இசைத் துறையில் சாதனை படைத்தவருக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்க கவர்னர் செல்லா கே.ராகவேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
ரோட்டரி சங்க மாவட்ட இயக்குநர் கோகுல்ராஜ்.எஸ்., துணை கவர்னர் அங்கிதா தினேஷ் ஆகார் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்வில் இசைத்துறையில் 40 ஆண்டுகளைத் தாண்டி சாதனை படைத்து வரும் பிரபல பின்னணி பாடகர் மனோவுக்கு சாதனையாளர் விருதை சிறப்பு விருந்தினர் செல்லா கே.ராகவேந்திரன் வழங்கி கௌரவித்தார்.
விழா ஏற்பாடுகளை ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் அப்&டவுன் தலைவர் எம்.பிரபாகர், திட்ட சேர்மன் ஏ.சரவணன், வெகேஷனல் சர்வீஸ் இயக்குநர் செந்தில்நாதன் கே.ஓ., செயலாளர் விஜய் மணிகண்டன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.