ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல் நிலைப் பள்ளி மாண வர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் போக்குவரத்து துறை இன்ஸ்பெக்டர் நிர்மலா, ரோட்டரி கிளப் நிறுவனர் வள்ளி கனக ராஜ், திருப்பூர் குட் அசோசியேசன் தலைவர் சி.என்.ராமசாமி, செயலாளர் சம்பத், ஸ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட் பாலமுருகன் மற்றும் சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், செலின் ராணி, சாந்தாமணி மற்றும் உடல் கல்வி ஆ ரியர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் 6 முதல் 11 வகுப்பு வரை 60 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் எடுத்த 124 மாணவர்களுக்கு வருடம் 3000 ரூபாய் உதவித் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.