கோவையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி, கரூரில் உள்ள பெட் (PET) பாட்டில் மறுசுழற்சி மற்றும் நிலையான ஜவுளி உற்பத்திப் பிரிவில் முன்னணியில் உள்ள ஸ்ரீ ரெங்கா பாலியஸ்டர் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஸ்ரீ ரெங்கா பாலியஸ்டர் நிறுவனத்தின் தலைவர் சங்கர் கனகசபை மற்றும் கல்லூரி இயக்குநர் டாக்டர் பி.அல்லி ராணி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கூட்டு ஆராய்ச்சி, மாணவர் திட்டங்கள், தொழில்துறை பயிற்சி மற்றும் நிலையான ஜவுளி கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதே இந்த ஒத்துழைப்பின் நோக்கமாகும்.
ஸ்ரீ ரெங்கா பாலியஸ் டரின் நிர்வாக இயக்குநர் செந்தில் சங்கர், சமீப காலங்களில் தனது நிறுவனம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் குறித்து விளக்கினார்.
தினமும் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பெட் பாட்டில்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மறுசுழற்சி செய்வதில் பெயர் பெற்ற லிமிடெட், மக்கும் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட ஜவுளிகளில் தங்கள் நிலை யான நடைமுறைகள் மற் றும் புதுமைகளை காட்சிப்படுத்தியது.
மாணவர்களின் முயற்சி களைப் பாராட்டிய டாக் டர் பி.அல்லி ராணி பேசுகையில், வளாகத்தில் மாணவர்கள் கார்பன் தடம் பதித்த இந்தியாவில் உள்ள ஒரே கல்லூரி இது, என்று கூறினார்.
இறு தியில், ஜவுளித் துறையின் உதவிப் பேராசிரியர் களான ராஜேஷ்குமார் மற்றும் பிரகாஷ் ஆகியோர் பிரதிநிதிகளை வளாக சுற்றுப்பயணத்திற்கு வழி நடத்தினர்.
அதில் அவர்கள் ஆய்வகங்களைப் பார்வையிட்டு கல்லூரியில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தனர்.



