fbpx
Homeபிற செய்திகள்கோவையில் டெக்ஸலன்ஸ் ‘24’ என்ற தலைப்பில்தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு

கோவையில் டெக்ஸலன்ஸ் ‘24’ என்ற தலைப்பில்தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு

இந்திய ஜவுளி அமைச் சகத்தின் கீழ் இயங்கும் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் ஒரு நாள் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் டெக்ஸலன்ஸ் “24” என்ற தலைப்பில் நடைபெற்றது.

இதில் பேப்பர் பிர சன்டேஷன், போஸ்டர் பிரசன்டேஷன், பெஸ்ட் மேனேஜர், பிசினஸ் க்விஸ், மேனேஜ்மென்ட் அனலிட்டிக்ஸ், லோகோ டிசைனிங், அட்ஸாப், ஆன்-ஸ்பாட் போட்டோகிராபி, குரூப் டான்ஸ், ஃபேஷன் ஷோ போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இவைகளில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் ஜவுளித் துறையில் விரிவாக்கப்பட்ட ஆராய்ச்சி முயற்சிகளின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

கருத்தரங்கில் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர்.பி.அல்லி ராணி, ஜவுளி அமைச்சகத்தின் இணைச் செயலாளரும், SVPITM இன் ஆளுநர் குழுவின் தலைவருமான ஸ்ரீ அஜய் குப்தா,
ஸ்ரீ கண்ணபிரான் மில்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீ ஸ்ரீஹரி பாலகிருஷ்ணன், கரூர் ஜவுளி உற்பத்தியாளர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் கரூர் தலைமைச் செயல் அலுவலர் சங்கரலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img