பிஷப் அப்பாசாமி கல்லூரி வளாகத்தில் பிஷப் அப்பாசாமி கல்லூரி, சங்கமித்திரா சுற்றுச்சூழல் கல்வி மற்றும் முன்னேற்ற அறக்கட்டளை மற்றும் பீட்டர் மெஷின் டிரஸ்ட் இணைந்து சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு, கல்லூரி முதல்வர் கெத்சி தலைமை தாங்கினார். சங்கமித்திரா அறக்கட்டளை அறங்காவலர் சிந்து வரவேற்றார். கல்லூரி செயலர் டி. ரா ஜன், குழந்தைகள் நலக்குழு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பீட்டர் அமைதி அறக்கட்டளை தலைவர் டி.ஸ்டான்லி பீட்டர் வாழ்த்துரை வழங்கினார்.
இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மனநல மீளாய்வு மைய மாவட்ட நீதிபதி ஜெ.வி.ராஜ் பரிசுகள் வழங்கி பேசுகையில், “பெண்கள் நம் நாட்டில் பாதுகாப்பாக உள்ளனர்.நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் பெரிய இடைவெளி ஏற்பட் டுள்ளது. பெற்றோர்கள் குழந்தைகள் நம்மோடு எப்போது பேசுவார்கள் என்று ஏங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்” என்றார்.