Homeபிற செய்திகள்சேலம் மாவட்டம் சோனா ஸ்டார், சோனா தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

சேலம் மாவட்டம் சோனா ஸ்டார், சோனா தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

சேலம் சோனா ஸ்டார் மற்றும் சோனா தொழில்நுட்பக்கல்லூரியும் இணைந்து “நாளை தொழில் நுட்பம் இன்று” என்பதுகேற்ப உலகலவிய தொழில்நுட்ப பயிற்சிகள் மாணவர்க ளுக்கு வழங்கப்பட்டது. சோனா கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் மற்றும் சோனா ஸ்டார் முதன்மை அதிகாரி தியாகு வள்ளியப்பாவால் துவங்கப்பட்ட 3டிஎக்ஸ் என்ற தனித்துவமான ஆராய்ச்சி மையம் மூலம் மற்றும் தொழில்துறை வல்லூநர் ரபின்தரசா வழிகாட்டுதல் படி சுமார் ஆறு மாத காலத்தில் ஆறு மிக சிறப்பான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் தானியங்கி மின்சார வாகனம், டிரோன், ஏ.ஆர்.வி.ஆர் வசதி ஆகியவைகள் போன்ற சிறப்பான தொழில்நுட்பங்களை 150 மாணவர்கள் மற்றும் 20 பேராசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டு இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சோனா கல்வி குழுமத்தின் துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா நோக்கம் அதிக தொழில்முனைவோர்களை உருவாக்குவதாகும். அதன்படி இத்திட்டம் தொடங்கப்பட்டு இதில் மாணவியர்களுக்கும் சரி பங்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியினை சிறப்பாக ஒருங்கிணைத்த சோனா ஸ்டார் தொழில் ஆலோசகர் சுரேஷ்ரா, திட்ட தலைவர் நாகராஜன், சோனா மெக்கானீக்கல் துறைதலைவர் பேராசிரியர் செந்தில்குமார். துணைத் துறைத்தலைவர் பேராசிரியர் முரளிதரன், பேராசிரியர் வெங்கடேஷ் ராஜா ஆகியோர்களை நிர்வாகத்தினர் வெகுவாக பாராட்டி னார்கள். இதில் 6மாதம் சிறப்பாக இந்த 6 திட்டத்தை பயின்று செயல்பாட்டுக்கு கொண்டுவந்த 150 மாணவர்கள் மற்றும் 20 பேராசிரியர்களுக்கு சோனா கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் தியாகுவள்ளியப்பா மற்றும் தொழில் துறை வல்லூநர் ரபின்தரசா ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img