Homeபிற செய்திகள்அயோத்தியாப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.21.24 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள்

அயோத்தியாப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.21.24 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள்

அயோதியாப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.21.24 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை செய்தியாளர் களுடன் சென்று மாவட்ட கூடு தல் ஆட்சியர் பாலச்சந்தர் ஆய்வு செய்தார்.

சேலம் மாவட்டம், அயோத்தி யாப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சீ.பாலச்சந்தர் செய்தியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்விற்குப்பின், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சீ.பாலச்சந்தர் செய்தியா ளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொது மக்களின் நலனுக்கென பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் முறையாக பொதுமக்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்றைய தினம் சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டிணம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில், அயோத்தியா பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்தில், ஒப்படைக்கப்பட்ட வருவாய் இனங்கள் திட்டத்தின் கீழ் ரூ.3.42 கோடி மதிப்பீட்டில் புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணியினையும், பிரதான் மந்திரி வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.66 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கீரீட் சாலைகள், அச்சுக்கல் சாலைகள், கதிரடிக்கும் களங்கள், பள்ளிக் கழிவறைகள், சைக்கிள் நிறுத்தும் கூடம், பொது விநியோகக் கூடங்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், பள்ளிகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

15வது நிதிக்குழு

15வது நிதிக்குழு மான்ய திட்டத்தின் கீழ் ரூ.8.56 கோடி மதிப்பீட்டில் குடிநீர் குழாய் இணைப்புகள் மற்றும் சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், ராஷ்டிரீய கிராம் சுவராஜ் அபியான் திட்டத்தின் கீழ் ரூ.12.70 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருவதையும், ஊரக குடிநீர் இயக்கத்தின் கீழ் ரூ.1.95 கோடி மதிப்பீட்டில் தனிநபர் இல்ல குடிநீர் இணைப்பு வழங்கப் பட்டு வருவதையும் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.

அயோத்தியாபட்டிணம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.21.24 கோடி மதிப்பீட்டில் சாலை அமைத்தல், குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வின்போது மேற்குறிப் பிட்டுள்ள அனைத்து பணிகளைத் தரமாகவும், உரிய கால அளவிலும் செய்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சீ.பாலச் சந்தர் செய்தியாளர் பயணத்தில் தெரிவித்தார்.

இச்செய்தியாளர் பயணத்தின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.சிராஜூதீன், ஆர்.வெட்கட்ரமணன், ஒன்றியப் பொறியாளர் ஆர்.சங்கர்கணேஷ், உதவி பொறியாளர் ஆர்.ஜெயதிலகன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img