சேலம் மாநகராட்சியில் ரூ.52 கோடி மதிப்பீட்டில் 3 ஏரிகள் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. போடி நாயக்கன்பட்டி ஏரி புனரமைத்து அழகுபடுத்தும் பணி மற்றும் சாலைப் பணிகளை செய்தியாளர் பயணத்தின்போது மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் நேரில் ஆய்வு செய்தார்.
சேலம், போடிநாயக்கன்பட்டி ஏரி புனரமைத்து அழகுபடுத்தும் பணி மற்றும் சூரமங்கலம் ரெட்டியூர் மாரியம்மன் கோவி லிலிருந்து குரங்குச் சாவடி சந் தைக்குச் செல்லும் சாலைப் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இச்செய்தியாளர் பயணத்தில், அவர் தெரிவித்ததாவது:
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் சேலம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து உரிய அறிவுரைகளை வழங்கி வருகின்றார்கள்.
குறிப்பாக, நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி நீர்ப்பிடிப்பு திறனை அதிகரிக்கச் செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில், சேலம் மாநகராட்சியில் போடிநாயக்கன்பட்டி ஏரி, அல்லிக்குட்டை ஏரி மற்றும் மூக்கனேரி ஆகிய நீர்நிலைகளில் ரூ. 52 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் தற்போது சராசரியாக 50 சதவிகிதம் முடிவடைந்துள்ளன.
இன்றைய தினம் சேலம், போடி நாயக்கன்பட்டி ஏரி புனரமைத்து அழகுபடுத்தும் பணி நடைபெற்றுவருவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
போடிநாயக்கன்பட்டி ஏரியானது பழைய சூரமங்கலம் கிராமம் மற்றும் ஜே.ஜே.நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி 20.25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
போடிநாயக்கன்பட்டி ஏரியை புனரமைத்து அழகுபடுத்துவதற்கு உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.19 கோடி தமிழ்நாடு அரசால் வழங்கப்பட் டுள்ளது.
போடிநாயக்கன்பட்டி ஏரியை புனரமைப்பதன் மூலம் ஏரியைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களின் மண், குடிநீர், நிலத்தடி நீர் மாசுபடுவது தடுக்கப்படுவதுடன் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயத் திற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து, விவசாயம் உற் பத்தி பெருக்கத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஏரியில் சுத்தமான நீரை சேமிப்பதன் மூலம் மீன்பிடி தொழில், படகு சவாரி மற்றும் பிற சமூக நடவடிக்கைகள் மேற் கொள்ளவும், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு குடிநீர் வசதி கிடைத்திடவும், கனமழையின் போது ஏரியில் மழைநீர் தேங்கி அதன் மூலம் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வெள் ளம் பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோன்று, பொதுமக்க ளின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான சாலை வசதியை மேம்படுத்தும் வகையில் சேலம் மாநகராட்சியில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழ்நாடு நகர்புர சாலை உட் கட்டமைப்புத் திட்டத்தின் கீழ், 123.496 கி.மீ. நீளத்திற்கு ரூ.59.13 கோடி மதிப்பீட்டில் 759 எண்ணிக்கையிலான சாலை மறு சீரமைப்புப் பணிகளும், நகர்புற சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ், 55 கி.மீ. நீளத்திற்கு ரூ.18.84 கோடி மதிப்பீட்டில் 346 எண்ணிக்கையிலான சேதமடைந்த சாலைகள் மறு சீரமைப்புப் பணிகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், மாநில நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.25.37 கோடி மதிப்பீட்டில் 427 சாலைகள் 48.184 கி.மீ. நீளத்திற்கு மறு சீரமைப்புப் பணிகளும், 15-வது மத்திய நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.26.79 கோடி மதிப்பீட்டில் 372 சாலைகள் 59.057 கி.மீ. நீளத்திற்கு மறுசீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தவகையில், இன்றைய தினம் சூரமங்கலம் மண்டலம், ரெட்டியூர் மாரியம்மன் கோவி லிலிருந்து குரங்குச் சாவடி சந்தைக்குச் செல்லும் ரூ. 21 இலட்சம் மதிப்பிலான சாலைப் பணிகள் நடைபெற்றுவருவதை நேரில் ஆய்வு செய்யப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் நடை பெற்றுவரும் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தரமாகவும், உரிய கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச் சந்தர் செய்தியாளர் பயணத்தில் தெரிவித்தார்.
இச்செய்தியாளர் பயணத்தின் போது, செயற்பொறியாளர் வி.திலகா, மாமன்ற உறுப்பினர் ஜி.குமரவேல் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.