சேலம் மாவட்ட கேரம் கழகம் மற்றும் ஒய்எம்சிஏ இணைந்து நடத்தும் சேலம் மாவட்ட கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கத்தில் நடைபெற்றது.
இதில், மாவட்ட தலைவர் நாசர்கான் (எ) அமான் தலைமை ஏற்றார். இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக சேலம் வடக்கு எம்எல்ஏ ராஜேந்திரன் கலந்து கொண்டு மாணவ மாண வியருக்கான கேரம் போட் டிகளை துவக்கி வைத்தார்.
மாவட்ட அளவில் நடைபெறும் இப்போட்டியில் 11, 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவியர் 150 பேர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கேரம் கழக செயலாளர் மரிய இருதயம், பொருளாளர் கார்த்திகேயன், முதல் நிலை துணைத் தலைவர் சிவக்குமார், ஆலோசகர் விஜயராஜ் துணைத் தலைவர் கார்த்திகேயன், இணை செயலாளர் சக்தி வேல், மண்டல செயலாளர் தியாகராஜன், சேலம் மாவட்ட செயலாளர் அன்பன் டேனியல், பொருளாளர் அல்லி முத்து, செயல் தலைவர் லாரன்ஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.