காரமடை ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரிக்கு பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அண்ணா பல்க லைக்கழகத்தால் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. சுயாட்சி அந்தஸ்து கடிதத்தை ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரித்தலைவர் என்.தர்மலிங்கதிடம் கல்லூரி செயலாளர் முனைவர் எஸ்.கார்த்திகேயன் வழங்கினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் கோ.ஜெயபிரகாஷ், கல்லூரி தலைமை செயல் அதிகாரி முனைவர் என். பிரசன்னன், கல்லூரி கல்வி நிலைய அதிகாரி விரிவுரையாளர் மலர்விழி ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.
சமீபத்தில் கோயம்புத்தூர் காரமடை ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி பல்கலைக்கழக மானி யக் குழுவினரால் “2F” அந்தஸ்து வழங்கப்பட்டது, குறிப்பிடத்தக்க ஒன்று. இதன் மூலம் கோவை நகரின் சிறந்த சுயாட்சி பொறியியல் கல்லூரியாக திகழும் என்பதில் ஐயமில்லை.
தன்னாட்சி அந்தஸ்தைப் பெறுவதில் உறுதுணையாக இருந்து பங்களிப்பு செய்த அனைத்து ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் நிர்வாகம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. மேலும், பல்கலைக்கழக மானியக் குழு அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாகக்குழு, கல்வி மன்றம். பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், ஆகியோரின் தொடர்ச்சியான ஆதரவுக்கும், நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.