தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, ராயல் கேர் மருத்துவமனை மற்றும் அசோசியேஷன் ஆஃப் அலையன்ஸ் கிளப் இன்டர் நேஷனல் (கோவை) இணைந்து நடத்திய புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை கோவில் பாளையத்தில் உள்ள இன்ஃபோ இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது.
ராயல் கேர் மருத்துவம னையில் உள்ள அமெரிக்கன் ஆன்காலஜி இன்ஸ்டிடியூட் கதிர்வீச்சு மருத்துவ நிபுணர் டாக்டர் சி.அன்பு பங்கேற்று, புற்றுநோய் நோய்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் சந்தே கங்களுக்கும் விளக்கம் அளித்தார்.
புற்றுநோய் என்பது குணப்படுத்தக்கூடிய நோயாகும், புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது நோயை முழுமையாக குணப்படுத்த உதவுகிறது. மற்றும் புற்றுநோயைத் தடுப்பதற்கான வழிகளை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அலையன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் கோவை மாவட்ட சங்க ஆளுநர் டாக்டர் சீனிவாச கிரி, இன்போ இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் நிறு வன முதல்வர் டாக்டர் என்.கோட்டீஸ்வரன் மற்றும் 300 மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண் டனர்.