ரோட்டரி கிளப் ஆப் டெக்சிட்டி சங்கத்தின் சார்பாகஅரவக்குறிச்சியில் புதிதாக ரோட்டரி கிளப் ஆப் அரவக்குறிச்சி என்ற சங்கம் துவக்கவிழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் 2023 – 2024 மாவட்ட கவர் னர் ஆனந்தஜோதி, முன்னாள் கவர்னர் கோபால கிருஷ்ணன்,
ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன், துணை ஒருங்கினைப்பாளர் சூரிய நாராயணா, உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் மோகன்குமார், கரூர் டெக்சிட்டியின் தலைவர் பாக்கியராஜ், செயலாளர் ராஜசேகர் சிவசாமி, பொருளாளர் சசிகுமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
ரோட்டரி கிளப் ஆப் அரவக்குறிச்சியின் தலைவராக அம்பிகா ஏஜென்சீஸ் செந்தில், துணைத் தலைவராக சஞ்சனா டிரேடர்ஸ் வினோத் ஜெயராமன், பொருளாளராக பாலகுமார் மற்றும் உறுப்பினர்கள் பதவிஏற்றுக் கொண்டனர்.