fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையத்தில் சாலை பாதுகாப்பு வார விழா

மேட்டுப்பாளையத்தில் சாலை பாதுகாப்பு வார விழா

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை தேசிய சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று மேட்டுப்பாளையத்தில் சாலைப்பாதுகாப்பு குறித்து விழிப் புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

போக்குவரத்து இணை ஆணை யர் சிவகுமாரன் உத்தரவின் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் கணேசன் மேற்பார்வை யில் போக்குவரத்து ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் இயக்க வேண் டும், சீட் பெல்ட் அணிந்து கார் இயக்க வேண்டும், மது போதையில் வாகனத்தை இயக்கக்கூடாது, அதிவேகமாக வாகனங்களை இயக்கக்கூடாது, போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங் கிய துண்டு பிரசுரங்களை மேட்டுப்பாளையத்தில் பல்வேறு பகுதிகளில் வட்டாரப் போக்கு வரத்து அலுவலர்கள் நேரிடையாக வழங்கினர்.

துண்டு பிரசுரங்கள் வழங்கும் போது போக்குவரத்து விதி முறைகளை முறையாக கடை பிடிப்பது குறித்து விளக்கி விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img