தேனியில் கண்டமனூர் ஸ்ரீ கிருஷ்ணா டெக்ஸ் சில்க்ஸ் மற்றும் ரெடிமேட் ஷோரூம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு நிறுவனத்தின் உரிமையாளர் கோவிந்த ராஜ், சுதாராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார். நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் அசோக் கௌ தம், அகிலேஷ் கௌரவ் ஆகியோர் வரவேற்றனர்.
இவ்விழாவில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தேனி மாவட்ட தலைவர் செல்வகுமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி ஜவுளி கடையை திறந்து வைத்தார். தேனி டி.எஸ்.பி பார்த்திபன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழாவில் தொழிலதிபர் சஹானா சிவகுமார் உள்பட தேனி நகர முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.