சத்தியமங்கலம் ஆனை கொம்பு மண்டபத்தில் நடந்த விழாவில், “வாங்க கல்வியை கொண்டாடுவோம்“ விழாவில் 110 மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதற்கான காசோலை வழங்கப்பட்டது.
ரீடு நிறுவனத்தின் இயக்குனர் கருப்புசாமி பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ரூ.5,80,000க்கான காசோலைகளை வழங்கினார். மற்றும் 2 பெண்களுக்கு சுய தொழில் செய்வதற்கு தலா 25 ஆயிரம் வழங்கினார்.
கருத்துரையாளர்கள் ஆர்.ஜானகி ராமசாமி (தலைவர், சத்தியமங்கலம்), கீதா நடராஜன் (தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய உறுப்பினர்), பாஸ்கோ இறையன்பு (கல்வியாளர், இயக்குனர், சாரு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சத்தியமங்கலம்), நித்யா இறையன்பு (தலைவர், செரோஸ் ஓய்ஸ் மகளிர் சங்கம் சத்தியமங்கலம்), அரசு தாமசு (தலைமை ஆசிரியர் – பணி நிறைவு), கோபி (ஆனைக் கொம்பு), ஸ்ரீராம் (தலைவர், திருமண மண்டபம் உரிமையாளர்கள் சங்கம்), சென்னியப்பன் (வழக்குரைஞர், மனிதம் சட்ட உதவி மையம்), குணசேகரன் (சமூக செயல்பாட்டாளர்) ஆகியோர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இறுதியாக ரீடு நிறுவனத்தைச் சேர்ந்த அன்னக்கொடி பட்டம்மாள் நன்றி கூறினார்.



