அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை உதவிகளை வழங்கிடும் நடவடிக்கையின் அடிப்படையில் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் தொழில் நிறுவனத்தில் ரூ. 17,000 மாத சம்பளத்தில் நிரந்தர பணி வழங்கப்பட்டுள்ளது.
புதியதாக தொடங்கப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி மாற்றுத்திறனாளிகளின் குறைகளை களையவும், நலத்திட்ட உதவிகளையும், உதவி உபகரணங்களையும் எளிதில் பெற்றிடவும், மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்கள் அரசின் நலத் திட்டங்களை எவ்வித சிரமம் இன்றி எளிதில் பெறவும் வழிவகை செய்திட இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கொரோனா பெருந்தொற்று கால ஊரடங்கு காலத்தை தவிர்த்து மற்ற அனைத்து வாரங்களிலும் 44 வாராந்திர முகாம்கள், 7 வட்டார அளவிலான சிறப்பு முகாம்கள் என 51 சிறப்பு முகாம்கள் இதுவரையில் நடத்தப்பட்டுள்ளன.
வட்டார அளவிலான சிறப்பு முகாம்கள் மூலம் 4264 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு பயனடைந்துள்ளனர். ஆக கடந்த 15 மாதங்களில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் 20,632 மாற்றுத்திறனாளிகள் அரசு நலத்திட்டங்களை பெற தகுதி உடையவர்களாக கண்டறியப்பட்டு ரூ.7.46 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு பயனடைந்துள்ளனர்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுநாள் வரையில் பல்வேறு ஊனங்களால் பாதிக்கப்பட்ட 2280 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 கோடியே 47 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டிலான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரையில் மருத்துவச் சான்றுடன் கூடிய 10 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நாளது வரையில் 5760 மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள மாற்றுத்திறனாளிகளுக்கு நல அட்டை வழங்கப்பட்டுள்ளது. 5232 வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
6498 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 9285 மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தார் பொருளாதார மேம்பாடு வேண்டி உதவி கேட்கும் பட்சத்தில் அவர்கள் சுயதொழில் செய்திட வங்கிகள் மூலம் மானிய கடன் உதவிகள் ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இதில் 25 ஆயிரம் ரூபாய் அரசு மானியமாக வழங்குகிறது.
அதனடிப்படையில் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான வங்கிக்கடன் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
25 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 62 ஆயிரத்து 500 மதிப்பிலான சக்கர நாற்காலியும்.
101 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 90 ஆயிரத்து 840 மதிப்பிலான தையல் இயந்திரங்களும், 92 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கையடக்க திறன்பேசிகளும் ((VI and HI Smart Phone), 131 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடியே 21 ஆயிரத்து 500 மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 19 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 57 ஆயிரத்து 763 மதிப்பிலான முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 21 மாற்றுத்திறனாளிகளுக்கு ரு.20 லட்சத்து 99 ஆயிரத்து 979 மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியும், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்களும்.
72 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 320 மதிப்பிலான காதொலிக் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 20,632 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 7 கோடியே 45 லட்சத்து 94 ஆயிரத்து 402 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் 07.10.2022 முதல் 4.11.2022 வரையில் திமிரி, ஆற்காடு, வாலாஜா. காவேரிப்பாக்கம். சோளிங்கர், நெமிலி ஆகிய 7 வட்டாரங்களில் மாற்றுத்திறனாளி நலத்துறையுடன் இணைந்து அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.
பரிசீலனையில் 4,264 பேர் விண்ணப்பம்
இதில் பராமரிப்பு நிதி உதவி தொகை வேண்டி 696 மாற்றுத்திறனாளிகளும், பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 271 மாற்றுத்திறனாளிகளும், வீல் சேர் வேண்டி 307 மாற்றுத்திறனாளிகளும், செயற்கை அவயம் வேண்டி 58 மாற்றுத்திறனாளிகளும், வங்கி கடனுதவி வேண்டி 137 மாற்றுத்திறனாளிகளும்.
PMAY திட்டத்தின் வீடு வேண்டி 96 மாற்றுத்திறனாளிகளும், வீட்டு மனை பட்டா வேண்டி 126 மாற்றுத்திறனாளிகளும், PHP வேண்டி 333 மாற்றுத்திறனாளிகளும், தொழில் மையம் மூலம் தொழில் துவங்க வேண்டி 234 மாற்றுத்திறனாளிகளும்.
வேலைவாய்ப்பு வேண்டி 78 மாற்றுத்திறனாளிகளும், மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி சேர்க்கை வேண்டி 19 மாற்றுத்திறனாளிகளும், காதுகேளாதோர்க்கான சிறப்பு பள்ளி சேர்க்கை வேண்டி 5 மாற்றுத்திறனாளிகளும், PHP அட்டை பதிவு வேண்டி 646 மாற்றுத்திறனாளிகளும், மருத்துவ காப்பீடு திட்டம் வேண்டி 406 மாற்றுத்திறனாளிகளும், ஆவின் அங்காடி வேண்டி 24 மாற்றுத்திறனாளிகளும், மூன்று சக்கர சைக்கிள் வேண்டி 81 மாற்றுத்திறனாளிகளும், தையல் இயந்திரம் வேண்டி 98 மாற்றுத்திறனாளிகளும், தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசி வேண்டி 136 மாற்றுத்திறனாளிகளும், காதொலி கருவி வேண்டி 64 மாற்றுத்திறனாளிகளும், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி வேண்டி 61 மாற்றுத்திறனாளிகளும், ஆதார் அட்டை பதிவு வேண்டி 52 மாற்றுத்திறனாளிகளும், ஆக மொத்தம் 4264 பயனாளிகள் விண்ணப்பங்கள் கொடுத்துள்ளார்கள். இதில்UDID அட்டை 242 பயனாளிகளுக்கும், PHP ஆணை 13 பயனாளிகளுக்கும் முகாமிலேயே வழங்கப்பட்டுள்ளது.
7 பேருக்கு பணி நியமன ஆணை
முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு வேண்டி விண்ணப்பித்து வருகின்றனர். அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் சீரிய நடவடிக்கையின் காரணமாக வட்டார அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கிவரும் Indocool Composites Pvt Ltd என்ற தனியார் நிறுவனத்தில் ரூ.16,700/- மாதசம்பளத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றிட 7 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதனால் அந்த மாற்றுத்திறனாளிகள் நிரந்தர வேலைவாய்ப்பினை பெற்று அவர்களின் வாழ்வினில் ஒளியேற்றப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
வெளியீடு:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
இராணிப்பேட்டை மாவட்டம்.