fbpx
Homeபிற செய்திகள்ராசிபுரத்தில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா

ராசிபுரத்தில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா

இராசிபுரத்தில் ராம் ராஜ் காட்டன் தனது ஷோரூமைத் திறந்துள்ளது. தென் மாநிலம் முழுவ தும் வெண்மை நிற ஆடைகளை உற்பத்தி செய்து, விற்பனையில் சாதனை படைத்துவருகிறது ராம்ராஜ் காட்டன் நிறுவனம். பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் காப்பதில் அக்கறை கொண்டுள்ள இந்நிறு வனம், தமிழகத்திலுள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் தனது ஷோரூம்களை திறந்து வெற்றி கண்டுள்ளது.

மேலும் உலகெங்கும் பரவியுள்ள தமிழருக்காய் www.ramrajcotton.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் விற்பனையை விரிவுபடுத்தியதோடு, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுக ளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்து வருகிறது.

ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தங்களது அடுத்த புதிய ஷோரூமை மார்ச் மாதம் 10 ஆம் தேதி (நேற்று) 238- அறிஞர் அண்ணா சாலை, பஞ்சாப் நேஷனல் வங்கி அருகில், ராசிபுரம் 637 408 என்ற முகவரியில் துவங்கி உள்ளது.

“திருப்பணிச்செம்மல்” அருட்செல்வர் கை. கந்தசாமி( ராசிபுரம் அருள் மிகு காசி விநாயகர் இயற்கை நலவாழ்வு மையம்) ஷோரூமை திறந்து வைத்தார். முனைவர் கவிதா சங்கர் (இராசிபுரம் நகர மன்ற தலைவர்) விளக்கேற்றி வைத்தார்.

பாலசுப்ரமணியம் (சாசன தலைவர், ரோட்டரி சங்கம், இராசிபுரம்) முதல் விற்பனையை துவக்கி வைத்தார். முனைவர் மு.ஆ.உதயக் குமார் (மாவட்ட கல்வி அலுவலர் – பணி நிறைவு) முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார்.

திறப்பு விழாவிற்கு வந்திருந்தவர்களை ராம் ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர். நாகராஜன் வரவேற்றார். ராம்ராஜ் காட்டன், உற்பத்தி செய்யும் அனைத்து ரகங்களும் மிருதுவான பருத்தி நூலிழைகளை கொண்டு தயார் செய்யப்பட்ட துணி ரகங்களிலிருந்து முன்னணி வல்லுநர் களை கொண்டு வடிவமைத்து விற்பனை செய்யப்படுகிறது.

வேட்டிகள், சர்ட்டுகள், பனியன்கள் தயாரித்து தென்னிந்தியா முழுவதும் மட்டுமல்லாது வடமாநிலம் மற்றும் வெளி நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே வேட்டிக்கென்று தனி முத்திரை பதித்து முதலிடத்தில் உள்ள ஒரே நிறுவனம் ராம்ராஜ் காட்டன். இப்போது ராம் ராஜ் நிறுவனம் பெண் களுக்கென்றே காட்டன் சேலைகள் மற்றும் பட்டு சேலைகளுக்கான தனி பிரிவுகள் தொடங்கி யுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img