ராம்ராஜ் காட்டன் வேட்டி வாரத்தை முன்னிட்டு ரூ.500க்கு 3 வேட்டிகள், ரூ.600க்கு 2 டபுள் பேன்சி பார்டர் வேட்டிகள் ரூ.900க்கு 2 பஞ்சகச்சம் வேட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய இளைய தலை முறையினருக்கும் பாரம்பரியத்தில் ஆர்வம் ஏற்படுத்தி, அவர்களது மனதில் அது ஆழப்பதிந்து, தொடர்ந்து அவர்கள் ஈடுபாட்டுடன் வேட்டி என்ற இந்திய கலாச்சார உடையின் மகத்துவம் அவர்கள் வாழ்வில் ஒரு பகுதியாக மாற ராம்ராஜ் காட்டன் நிறுவனம் முயற்சிகளை எடுத்து வருகிறது.
வேட்டிக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்று தந்து ராம்ராஜ் காட்டன் இந்த ஆண்டு வேட்டி வாரம் 2024 ஜனவரி 1 முதல் 7 வரை கொண்டாட 3 வேட்டிகள் கொண்ட கோம்போ பேக் ரூ.500க்கு விற்பனைக்கு வருகிறது.
மேலும் இவ்வருடம் கூடுதல் சலுகையாக 3 சிங்கிள் பேன்சி பார்டர் வேட்டிகள் ரூ. 500, 3 சிங்கிள் பெரிய பார்டர் வேட்டிகள் ரூ.500, 2 சிங்கிள் பேன்சி பார்டர் வேட்டிகள் ரூ.500, 2 டபுள் பேன்சி பார்டர் வேட்டிகள் ரூ.600 மற்றும் 2 பஞ்சகச்சம் ரூ.990 ஆகியவையும் விற்பனைக்கு வருகின்றன.
இந்திய தேசிய பாரம்பரியம் ஒவ்வொரு நிலையில் அனைவருக்கும் பரந்து விரிய இந்த வேட்டிவாரம் தயாரிப்பு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமையும்.
ராம்ராஜ் காட்டன், விவசாய கிராமப்புற நெசவாளர் நலன் கருதி பெருமளவில் வாடிக்கையாளரை சென்றடைய வாங்கும் விலையில், இந்த ஆண்டு வேட்டி வார கொண் டாட்டத்திற்கு 3 வேட்டிகளின் கோம்போ பேக்கை விற்பனைக்கு விடுக்கிறது.
இந்த கோம்போ பேக் ரகங்கள் தமிழகத்தில் உள்ள முன்னணி ஜவுளி நிறுவனங்களிலம் மற்றும் ராம்ராஜ் கம்பெனி ஷோரூம் களிலும் கையிருப்பு உள்ள வரை விற் பனையில் இருக்கும்.
அரசாங்கத்தால் 2015ல் தொடங்கி வைக்கப்பட்ட ஜனவரி 6 வேட்டி தினத்தை ராம்ராஜ் வேட்டி வாரமாக கொண்டாடி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் புதுபுது ரகங்களை அறிமுகப்படுத்தி, இந்திய கலாச்சார உடையான வேட்டியின் உபயோகம் பெருமளவில் உயர ராம்ராஜ் எல்லா முயற்சிகளையும் முன்னெடுத்து வெற்றி பெற்று வருகிறது.
வேட்டி கட்டியவர்களே மதிப்பு மிக்கவர்கள் என சல்யூட் அடிக்க வைத்த சாதனையாளர் கே.ஆர்.நாகராஜ்(ராம்ராஜ் நிறுவனர்) கிராமப்புற நெசவாளர்களின் வாழ்க் கையை மேம்படச் செய்து காந்தி கண்ட கனவினை நனவாக்கிட அனைத்து தரப்பினரும் உபயோகிக்கும் வண்ணம் ஆராய்ச்சிகள் பல செய்து 41 ஆண்டுகளாக தனித்துவம் மிக்க உடையாக வேட்டியை அதன் விற்பனையை மேம்படுத்தி வருகிறார்.
லிட்டில் ஸ்டார் குழந்தைகள் வேட்டிகள் முதல் ஜெனெக்ஸட் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டிகள் வரை இன்று மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, இளைஞர்கள் அனைவரையும் வேட்டி கட்ட வைத்த ராம்ராஜ் இந்த ஆண்டு வேட்டி வார விற்பனைக்கு சலுகை விலையில் அறிமுகப்படுத்தியுள்ள மேற்கூறிய வேட்டி ரகங்களை வாடிக்கையாளர்கள் பெற்று 2024 புத்தாண்டில் பாரம்பரிய கலாச்சரம் இன்றும் வளர்ந்துயர தன் முன் முயற்சிகளை முன்னெடுத்து வைத்துள்ளது.
தமிழர் பாரம்பரிய பண்டிகை பொங்கல் 2024க்கான முதல் பரிசாக வேட்டிவார ரகங்கள் பயனளிப்பதாக இருக்கும்.
விழாவில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் தலைமை செயல் நிர்வாகி கே.எ.செல்வகுமார், நிர் வாக இயக்குநர் பி.ஆர்.அருண் ஈஸ்வர், நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர்.நாகராஜன், இணை நிர்வாக இயக்குநர் அஸ்வின் மற்றும் தலைமை செயல் நிர்வாகி கணபதி ஆகியோர் புதிய வேட்டி ரகங்களை அறிமுகம் செய்து வைத்தனர்.