கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 25வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. முதல் நாள் விழாவில் கல்லூரி முதல்வர் என்.ஆர்.அலமேலு வரவேற்றார்.
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி தலைமை வகித்தார். இதில், பெங்களூரு எல்&டி டெக்னாலஜி சர்வீசஸ் லிமிடெட் நிறுவன தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆஷிஷ் ஹுஷு சிறப்பு விருந்திராக பங்கேற்று தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், பொறியியல், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், பயோமெடிக்கல் என்ஜினீயரிங், ஏரோ னாடிகள் என்ஜினீயரிங் துறைகளில் பயின்ற 549 பேருக்கு பட்டம் வழங்கினார்.
இரண்டாம் நாள் விழாவுக்கு ஏர்பஸ் இன்னோவேஷன் சென்டர் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்திய செயல்பாட்டுத் தலைவர் ராமநாதன் ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்திராக பங்கேற்று 545 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். மேலும், அந்தந்த துறைகளில் முதல் மதிப்பெண் பெற்ற 10 பேருக்கு தங்கப்பதக்கம், சிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், துணை முதல்வர் ப.கருப்புசாமி, துறை தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர் கலந்து கொண்டனர்.