fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரி சார்பில் வாய் சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரி சார்பில் வாய் சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம்

மார்ச் 20ம் தேதி உலக வாய் சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பாக இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில், வாய் ஆரோக்கியம்
மற்றும் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நாடகம் மற்றும் நடன நிகழ்வு நடத்தினர்.

இதை ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரியின் முதல்வர் டாக்டர் லோ. தீபானந்தன் மற்றும் கோவை காந்திபுரம் சி1 காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவனு ஆகியோர் சிறப்பு விருந் தினராக பங்கேற்று இவ்விழாவினை தொடங்கி வைத்தனர்.

இதில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சார நோட்டீஸ் வழங்கினர். இந் நிகழ்ச்சியை பல் மருத்துவ கல்லூரியின் ஈறு நோய் தடுப்பு பிரிவு மற்றும் சமூக பல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு பிரிவு இணைந்து நடத்தியது.

படிக்க வேண்டும்

spot_img