ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தனது 19வது பட்டமளிப்பு தினத்தை கடந்த பிப்ரவரி 28ம் தேதி எஸ் என் ஆர்ஆடிட்டோரியத்தில் நடத்தியது.
இந்த நிகழ்வில் எஸ்என்ஆர் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ ஆர்.சுந்தர், சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் எஸ்.கார்த்திகேயன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் முதல்வர் டாக்டர் எல்.தீபாநந்தன், உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர் .
இணை நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ ஆர்.சுந்தர், பட்டமளிப்பு விழாவை துவங்கி வைத்தார்.
கல்லூரி முதல்வர். டாக்டர் எல்.தீபாநந்தன், கற்றவர்களைப் பயன்படுத்தி மேலும் அறிந்து கொள்ளுமாறு பட்டதாரிகளுக்குத் தெரிவித்தார். இணை நிர்வாக அறங்காவலர் ஸ்ரீஆர். சுந்தர், பட்டதாரிகள் மற்றும் பதக்கம் வென்றவர்களை வாழ்த்தி, மக்களைச் சென்றடையவும் சேவை செய்யவும் பட்டப்படிப்புக் கல்வியின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.
10 துறைகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் SRDCH பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை சிறப்பு விருந்தினரிடமிருந்து பெற்றனர். மற்றும் 100 BDS பட்டதாரிகள், 11MDS முதுகலை பட்டதாரிகள் தங்கள் சான்றிதழ்களைப் பெற்றனர். டாக்டர்.எஸ். திவ்ய ஸ்ரீ, சிறந்த மாணவி விருது உட்பட 4 தங்கப் பதக்கங்களை வென்றார். கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்.