fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான ‘கிரியாபெஸ்ட்-2024’ போட்டி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான ‘கிரியாபெஸ்ட்-2024’ போட்டி

கோவை துடியலூர் அருகே உள்ள வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே ‘கிரியா பெஸ்ட்-2024’ என்ற பெயரில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இதில் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவியம், விநாடி- வினா, இசைக் கருவி வாசித்தல், குழு நடனம், மைம் ஷோ ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து 32க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 850 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பரிசளிப்பு விழாவில் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் டி. கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.என். உமா தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் என்.ஆர்.அலமேலு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பாராட்டி வாழ்த்தினார்.

சிறப்பு விருந்தினாராக கோவை இறைவி அகாடமி நிறுவரும், மனநல பயிற்சி யாளருமான ப்ரியா தாகிர் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசு தொகை, சான்றிதழ்களை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img