கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், மகளிர் மேம்பாட்டு மையம் சார்பில், சர்வதேச மகளிர் தின விழா நேற்று கோலாகலமாகக் கொண் டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை முதன்மை நிர்வாக அலுவலர் ஸ்வாதி ரோஹித் தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் வரவேற்றுப் பேசினார். மகளிர் மேம்பாட்டு மையத் தலைவர் முனைவர் ஜி.கவிதா ஆண்டறிக்கை வாசித்தார்.
இதில், கோவை வருமான வரி துணை ஆணையர் ப்ரயதிசர்மா, மகளிர் மேம்பாட்டு மைய சாதனை மலரை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். இதைத் தொடர்ந்து, மகளிர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் மகளிர் மேம்பாட்டு மைய செயலர் முனைவர் ஆர்.ரேகா, பொருளாளர் முனைவர் பி.வித்யா, மாணவத் தலைவர் ஆர்.நிரஞ்சனா, மாணவ செயலர் ஸ்கேர்லெட்ஸ்டீபன், பேராசிரி யைகள், மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.