கிருஷ்ணகிரியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜ வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், பாஜ வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
எங்களின் தேர்தல் அறிக்கையில் உலககெங்கும் திருவள்ளுவர் பண்பாட்டு மையங்கள் உருவாக்குவதாக அறிவித்துள்ளோம். சுதந்திரத்திற்கு பிறகு 75 ஆண்டுகளில் இந்தியா நிறைய முன்னேற்றங்களை கண்டுள்ளது. ஆனால் பெரும்பாலான அரசுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு தேவையான வேகத்தில் செயல்படவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டின் வளர்ச்சி பாதை ஏற்றம் கண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உலகின் 5வது பொருளாதார நாடாக இநதியா திகழ்வதுடன், வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக மாறி உள்ளது. உலகம் முழுவதும் இருந்து இந்தியாவுக்கு முதலீடுகள் வருகின்றன. தமிழகத்திற்கும் ஏராளமான முதலீடுகள் வந்துள்ளன. நாட்டின் பொருளாதார முன் னேற்றத்தில் உற்பத்தி துறை பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியாவில் செல்போன்கள் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. 2014ம் ஆண்டில் நாட்டில் 92 சதவீத செல்போன்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் பட்டன. இன்று இந்திய செல்போன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. முன்பு பாது காப்பு தளவாடங்கள் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருந்தது. இன்று இந்தியா உலகில் முதல் 25 பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக அறியப்படுகிறது.
மார்ச் 2024ல் அதாவது ஒரு மாதத்தில் சுமார் ரூ.20 லட்சம் கோடி மதிப்புள்ள 1344 கோடிக்கும் அதிகமான யு.பி.ஐ பரிவர்த்தனைகள் நாட்டில் நடந்தள்ளன. இன்று ஜன்தன் ஆதார் மொபைல் காரணமாக விவசாயிகள் தொழிலாளர்கள், ஏழைகளின் கணக்குகளுக்கு டி.பி.டி. மூலம் கடந்த ஆண்டுகளில் ரூ.29 லட்சம் கோடியை மாற்ற முடிந்தது.
இந்த பணம் உங்களுடை யது. ஊழல் இல்லாமல் உங்களை சென்றடைந்தது. இது பா.ஜனதா அரசால் முடிந்தது.
பா.ஜனதா ஒரு போதும் வாக்குகளை பெற, ஆட்சி அமைக்க அரசியல் செய்ததில்லை. நாட்டையும், சமூகத்தையும் கட்டியெழுப்ப மட்டுமே அரசியல் செய்திருக் கிறோம். இல்லை என்றால் எங்கள் ஆட்சியில் பாதுகாப்பு வழித்தடங்கள் 2 உருவாக்கியது. ஒன்று உத்தரபிரதேச மாநிலத்திலும், மற்றொன்று தமிழ்நாட்டிலும் திறக்கப்பட்டிருக்காது. எங்கள் அரசியல் அடித்தளம் தமிழ்நாட்டில் வலுவாக இல்லை. ஆனாலும் நாங்கள் இங்கே பாதுகாப்பு வழித்தடத்தை உருவாக்கினோம். நாட்டின் வளர்ச்சி கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை நாங்கள் உணர்ந்து இருக்கிறோம்.
இந்த முதலீடுகள் அனைத்தும் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை கொண்டு வரும். இந்த நாட்டின் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தேவை என்பதை நாங்கள் அறிவோம். மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்திற்கு பி.எம். மித்ரா மெகா டெக்ஸ்டைல் பார்க், பெங்களூர் – சென்னை விரைவு சாலை, சென்னை அருகில் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்கா கட்ட ஒப்புதல் அனுமதி வழங்கி உள்ளது.
தமிழக இளைஞர்களுக்கு பா.ஜனதா மட்டுமே சாத்தியமான மற்றும் துடிப்பு மிக்க விருப்பமாக விளங்கி வருகிறது. எதிர்க்கட்சிகள் பிரதமர் மீது தொடர்ந்து தனிப்பட்ட தாக்குதல்களை தொடர்ந்து வருகிறார்கள். அவர் மீது இவ்வளவு சேற்றை வீசுகிறீர்கள். நீங்கள் எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் தாமரைகள் இங்கே மலரும் என்பதை மறந்து விடுகிறீர்கள்.
இண்டியா கூட்டணி நிரந்தரம் ஆனது இல்லை. தேர்தல் தொடங்கும் முன்பே அவர்களுக்குள் சண்டையிட்டு கொள்கி றார்கள். அவர்கள் ஒன்றி ணைவதற்கு ஒரே காரணம் அதிகாரம் தான்.தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி நீடிக்குமா என்றால் இல்லை. அதிகாரமும் பதவியும் இன்றி இந்த கூட்டணி நிலைக்காது. உங்களின் விலை மதிப்பற்ற ஓட்டுக்களை நீங்கள் வீணடிக்க கூடாது. நேர்மைக்கும், நாணயத் திற்கும், செழுமைக்கும், மேன்மைக்கும், மோடிக்கு வாக்க ளியுங்கள். பா.ஜன தாவுக்கு வாக்களியுங்கள். பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள். கிருஷ்ணகிரியில் போட்டியில் பா.ஜனதா வேட்பாளர் நரசிம்மனுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.