fbpx
Homeபிற செய்திகள்மாணவர்களுக்கு இலவசமாக சீருடை வழங்கிய தொழிலதிபர்

மாணவர்களுக்கு இலவசமாக சீருடை வழங்கிய தொழிலதிபர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜோதிப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர், இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக வண்ணச் சீருடை வழங்கும் விழா பள்ளி தலைமை ஆசிரியர் லதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வண்ணச் சீருடையானது ரூபாய் 35,000 செலவில் 90 மாணவர்களுக்கு ஜோதிப்பட்டியை சேர்ந்த தொழிலதிபர் சங்கர்,அவர்கள் வழங்கினார்.

மேலும் ஒரு கூடுதல் ஆசிரியரை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக நியமணம் செய்து அவருக்கு மாதமாதம் ஊதியமும் இவர்,வழங்கி வரும் நிலையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாலக்கோடு வட்டார கல்வி அலுவலர் அன்புவளவன் அவர்கள் தொழிலதிபர் சங்கர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன்,ஆசிரியர்கள் தனலட்சுமி,சிவக்குமார்,ஞானசௌந்தர்யா, பெற்றோர் சங்கத்தின் சார்பில் ஜமுனா,சித்ரா,வடிவேல், அண்ணாதுரை ,பெரியண்ணன்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img