fbpx
Homeபிற செய்திகள்கேபிஆர் பொறியியல் கல்லூரியில் கட்டிட பொறியியல் துறை தொழில் வல்லுநர்கள் மாநாடு

கேபிஆர் பொறியியல் கல்லூரியில் கட்டிட பொறியியல் துறை தொழில் வல்லுநர்கள் மாநாடு

கோவை கேபிஆர் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியின் கட்டிட பொறியியல் துறை சார்பில் ‘இண்டஸ்ட்ரி கான்கிளேவ் 2024’ என்ற பெயரில் தொழில் வல்லுநர்கள் பங்கேற்ற மாநாடு நடை பெற்றது.
இதில் யுஆர்சி கன்ஸ்ட்ரக்சன் நிறு வனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கபிலன் தேவராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் சரவணன் சுற்றுச்சூழலுக்கு ஏற்றக் கட்டிடப் பொறியியலை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த மாநாட்டில் பல நிறுவனங்களை சார்ந்த 34 வல்லுநர்கள் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பல்வேறு சமீபத்திய போக்குகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றி கூறினர்.
இதில் பல்வேறு பில்டர்ஸ் அசோசியஷனை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img