fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பொங்கல் விழா

மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பொங்கல் விழா

தை முதல் நாளை முன்னிட்டு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையினை நாடு முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று அதிகாலை முதல் பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகள் வெகு உற்சாகமாக துவங்கியது. காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களும் அவர்களது குடும்பத்தினரும் காவல் நிலைய வளாகத்தில் பாரம்பரிய முறைப் படி அடுப்பு வைத்து பொங்கல் பொங்கி சூரியனை வழிபட்டனர்.

விழாவில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவ பெரியோர்கள் பங்கேற்றனர். துணை கண்காணிப்பாளர் பாலாஜி முன்னிலையில் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் பொங்கல் பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டா டப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காவலர்கள் அனைவரும் வழக்கமாக அணியும் சீருடையை தவிர்த்து ஒரே மாதிரியான பாரம்பரிய உடைகளை உடுத்தி தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.

தங்களது வீடுகளில் கொண்டாடுவது போல் பாரம்பரிய முறையில் ஆண் போலீசார் வேட்டி, சட்டை அணிந்தும், பெண் போலீசார் சேலை அணிந்தும் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து கிராமிய முறைப் படி நாட்டு மாட்டு வண்டியில் துணை கண்காணிப்பாளர் ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் பயணம் செய்தும், மாடுகளுக்கு உணவு வழங்கியும் மகிழ்ந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img