fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்

மேட்டுப்பாளையத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரொக்கப்பணம் ரூ.1000 வழங்க உத்தரவிட்டது.

அதனைத்தொடர்ந்து சென்னையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத்தொகுப்பு அனைத்து ரேஷன் கடைகளிலும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள 116 ரேஷன் கடைகளிலும் இன்று பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணியானது துவங்கியுள்ளது.

அந்த வகையில் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட மதீனா நகரில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி துவங்கியது. இதனை மேட்டுப்பாளையம் நகர் மன்றத்தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி, துணைத்தலைவர் அருள் வடிவு முனுசாமி மற்றும் நகராட்சி கவுன்சிலரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான ஜம்ரூத் பேகம் உள்ளிட்ட கவுன்சிலர்கள் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கி துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் திமுக தலைமைச்செயற்குழு உறுப்பினர் அஷ்ரப் அலி, நகர செயலாளர்கள் முனுசாமி, முகமது யூனூஸ், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் மூர்த்தி உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img