fbpx
Homeபிற செய்திகள்கோவை அருகே மலை கிராமத்தில் கட்டிட பொறியாளர்கள் சங்கம் பொங்கல் விழா கொண்டாட்டம்

கோவை அருகே மலை கிராமத்தில் கட்டிட பொறியாளர்கள் சங்கம் பொங்கல் விழா கொண்டாட்டம்

கோவை மண்டல கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக நேற்று மலை கிராமமான சோமையனூரில் கிராமத்து பாரம்பரியமிக்க தைத்திருநாள் பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது.
இதில் சங்கத்தின் தலைவர் ராஜதுரை தலைமை தாங்கினார், சிறப்பு விருந்தினர்களாக காவேரி குழும நிறுவன தலைவர் வினோத் சிங் ரத்தூர், நஞ்சுண்டாபுரம் பஞ்சாயத்து தலைவர் வி.கே.வி குழும தலைவர் வி.கே.வி. சுந்தர்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பொறியாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டதோடு இங்குள்ள கிராம மக்கள் அனைவரும் பண்ணை தோட்டத்தில் சமத்துவ பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதில் கிராம நாட்டுபுற இசை, மாட்டுவண்டி ஏரிகள், முறியடித்தல், கயிறு இழுத்தல், மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் குடும்பமாக கலந்து கொள்ளும் விளையாட்டுப் போட்டிகள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றன.

இதில் சங்க செயலாளர் தாமோதர சாமி, பொருளாளர் சோமசுந்தரம், உடனடி முன்னாள் தலைவர் ஜெயவேல், முன்னாள் பொருளாளர் வி.பி.பழனிசாமி மற்றும் திரளானோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img