Homeபிற செய்திகள்பொள்ளாச்சி விழாவில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு: வாட்ஸ்அப் மூலம் பாஜக பொய் பிரசாரம்

பொள்ளாச்சி விழாவில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு: வாட்ஸ்அப் மூலம் பாஜக பொய் பிரசாரம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடை பெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், பாஜகவை விமர்ச்சித்து ஆவேசமாக பேசினார். வாட்ஸ்அப் கதைகள் கூறி பொய் பிரசா ரத்தில் ஈடுபடுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

பொள்ளாச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை நடைபெற்றது. அதன்படி, இவ்விழாவில் கலந்து கொண்ட முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், 57,325 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அதேசமயம் ரூ.1273.51 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதன்பின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறையற்றி னார். அப்போது அவர் பேசியதாவது:

கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தேர்தல் களத்தில் கொடுத்த வாக் குறுதிகள் பலவற்றை நிறைவேற்றியுள்ளோம். கோட்டையில் இருந்து திட்டத்தை அறிவிக்கும் முதலமைச்சராக மட்டு மில்லாமல் களத்தில் நேராக ஆய்வு செய்கிறேன்.

தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய தெம்போடும் துணிவோடும் வந்திருக்கி றேன். சிறப்பான 3 ஆண்டு கால ஆட்சியை வழங்கிய பெருமையோடு உங்களை சந்திக்க வந்துள்ளேன். மக்களிடம் மகிழ்ச்சியை காணும்போது எந்த தேர்தல் வந்தாலும் நாம் தான் என்ற நம்பிக்கை வந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, இனி எந்த தேர்தல் வந்தாலும் நாம் தான் வெல்வோம்.
சிந்தித்து செயல்படுவ தால் பொருளாதாரம் வளர்கிறது. தமிழ்நாடு முன்னேறுகிறது. ஒவ் வொரு மாவட்டத்திற்கு தனித்தனியாக செயல் திட்டங்களை தமிழ்நாடு அரசு வகுத்து வருகிறது. மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செவிமடுப்பவன் நான். தமிழ்நாட்டை, தமிழர்களை பழிப்பவர்களுக்கு பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது.

திமுக ஆட்சியின் மீது பொறாமைப்பட்டு சிலர் வாட்ஸ் அப் யுனிவர்சிட்டி மூலம் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பொய், அவதூறுகளை பரப்புவோருக்கு பாடம் புகட்ட வேண்டிய சரியான நேரம் வந்துவிட்டது. பொய்களும், வாட்ஸ்அப் கதைகளும் பாஜகவின் உயிர் மூச்சு. மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாடு அரசு தடுக்கிறது என பிரதமர் மோடி பொய் சொல்கிறார். பாஜகவின் பொய் கட்டுக்கதைகள் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது.

இந்திய நாட்டு மக்களுக்கு எதையுமே செய் யாதவர் பிரதமர் மோடி, தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. தமிழ்நாட்டின் உரிமையையும், நாட்டின் ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுகிறோம். அதிமுக – பாஜக கூட்டணி பிரிந்ததுபோல் நடிக்கிறார்கள். கள்ளக் கூட்டணியை மக்கள் அடையாளம் கண்டு விட்டனர். பாசிசத்தை அழிக்க இந்தியாவை காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன். மக்கள் விரைவில் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்.

கோவைக்கு புதிய திட்டங்களை வெளியிட விரும்புகிறேன். தென்னை மரங்களை அதிகமாக பாதிக்கும் வேர் வாடல் நோய் இருக்கிறது. அப்படி வேர் வாடல் நோய் அதிகமாக இருக்கும் மரங்களை வெட்டி அகற்றுவதற்காக ரூ.14.4 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும். 3 லட்சம் தென்னங்கன்றுகள் ரூ.2.80 கோடியில் உழவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

அகில இந்திய அளவில் தேங்காய் விற்பனை செய்ய உரிய சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்படும் 157 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் வெளி மாநில வணிகர்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்து அதனால் வேளாண் பெருமக்கள் தேங்காய் விற்பனை செய்வதை ஊக்கு விப்போம்.

விற்பனை செய்யும் தேங்காய்க்காக பணம் விவ சாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். தென்னை விவசாயிகள் நலம் கருதி கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்து கூட்டுறவு சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் நுகர்வோர்களுக்கு விற் பனை செய்யப்படும்.


விளாமரத்தூர் சாலை முதல் அத்திக்கடவு அணை வரை 8.2 கிலோமீட்டரில் ரூ.ஒன்பது கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கப்படும். மூங்கில் மடை குட்டை பழங்குடியினர் பகுதியில் 57 லட்சம் ரூபாய் மதிப்பில் வடிகால் அமைக்கப்படும்.

மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், மாவூத்தம்பதி வாளையார் வனப்பகுதியில் தரைமட்ட குடிநீர் தொட்டி கட்டி தரப்படும். காரமடை, ஆனைமலை, சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4.39 கோடியில் புதிய சாலைகள் அமைக்கப்படும்.
இக்கரை போலுவாம் பட்டி ஊராட்சி, பெரிய நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், திவான் சா புதூர், சோமயம் பாளையம் ஊராட்சி மதுக்கரை ஊராட்சி ஒன்றியங்களில் நான்கு பாலங்கள் கட்டப்படும். 15 அங்கன்வாடி மையங்கள், 18 நியாய விலை கடைகள், 14 சமுதாய நலக்கூடங்கள், 7 பேரூராட்சிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படும்.


கோவை அரசு மருத்து வமனை கல்லூரியில் மழை நீர் வடிகால், கான்கிரீட் சாலை 10 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும். உக்கடம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தால் அகற்றப்பட்ட பேருந்து நிலையம் ரூ.20 கோடி ரூபாய் மதிப்பில் நவீன முறையில் சீரமைக்கப்படும் ஆர்.எஸ்.புரம் மாநக ராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பில் ஹாக்கி விளையாட்டு தரை அமைக்கப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img